இது ஒரு இந்துமதம் பற்றிய ஆன்மீக தளம் *********** இந்துமதம் மனிதனுக்கு காட்டிய நால்வர்...................... 1)..மாதா .... 2)..பிதா...... 3..குரு...... 4..தெய்வம் ..... 1 )மாதா ...2)பிதா _____________________ அன்னையும் தந்தையும் முதல் கடவுள் என்று இந்துமதம் சொல்கிறது..... ( ஒரு குழந்தை பிறக்க தயார் ஆகிறது..அதற்கு முன் அது கடவுளை கேட்டது ..... ) குழந்தை :- இறைவா "நீ என்னை பூமிக்கு அனுப்பபோவதாக சொல்கிறார்கள் .நான் இவ்வளவு சிறியவன் ஆகவும் உதவி அற்றவனாகவும் இருக்கின்றேன். நான் அங்கு எப்படி
வாழப்போகிறேன் ? கடவுள் :- பல தேவதைகளில் உனக்கென்ன இரண்டு தேவதைகளை தேர்ந்துஎடுத்துளேன்.அவர்கள் உனக்காக காத்திருப்பார்கள்.அவர்கள் உன்னை நன்றாக பார்துகொள்வார்கள் ".. குழந்தை :- இங்கே சொர்க்கத்தில் நன் ஆடி பாடி மகிழ்கிறேன்.எனக்கு அங்கு அது கிடைக்குமா? .. கடவுள்:- உன் தேவதைகள் உனக்காக ஆடுவார்கள் பாடுவார்கள்.நீ மகிழ்ச்சியாக அங்கு இருப்பாய்... குழந்தை:-
எனக்கு மனிதர்கள் பேசும் வார்த்தைகள் புரியாதே.அவர்கள் பேசும் மொழி எனக்கு தெரியாதே?... கடவுள் :- அது மிக சுலபம். உன் தேவதைகள் உனக்கு பேச கற்றுத்தருவார்கள்.நீ கேட்டறியாத வார்த்தைகளை கற்று தருவார்கள். குழந்தை:- (கடவுளை பார்த்து கேட்டது).நன் உன்னுடன் பேச விரும்பினால் என்ன செய்வது?. கடவுள்:- (சிரித்தபடி சொன்னார்).உன் தேவதைகள் உன் இராண்டு கரங்களையும் சேர்த்து என்னை எப்படி பிரார்த்திப்பது என்று கற்றுத்தருவார்கள். குழந்தை:- (வருத்ததுடன் சொன்னது).நன் இனி உன்னை காணமுடியாது. அதனால் வருத்தமாக இருப்பேன். கடவுள்:- (குழந்தையை அணைத்தபடி கூறினார் ).நான் எப்போதும் உன்னுடன் இருப்பேன்.உன் தேவதைகள் என்னைப்பற்றி பேசுவார்கள்...என்னை காணும் வழியை உனக்கு கற்று தருவார்கள்.. (அந்த வினாடியில் சொர்க்கத்தில் அமைதி நிலவியது.அனால் பூமியிலி இருந்து குரல்கள் நெருக்கத்தில் கேட்டது) குழந்தை:- ( அவசரமாக கேட்டது ).ஒ இறைவா நான் இந்த இடத்தைவிட்டு நீங்கப்போகிறேன்.எனது தேவதைகளின் பெயர்களை சொல்லுங்கள்.. கடவுள்:- உன் தேவதைகளின் பெயர்கள் உனக்கு முக்கியமல்ல.அனால் நீ அவர்களை ...."அம்மா அப்பா".....என்று அழைப்பாய்.....
நல்ல பகிர்வு .. அம்மா ,அப்பா இருவருக்கும் கொடுத்துள்ள விளக்கம் நன்றாக உள்ளது...வாழ்த்துக்கள்.....
ReplyDeleteNICE
ReplyDeleteThis comment has been removed by a blog administrator.
ReplyDeleteu r information is best by iashwarya
ReplyDelete