Thursday, January 20, 2011

ஆத்திகம் நாத்திகம்
*************************  "எது மனிதனுக்கு பிடிபடவில்லையோ அது தெய்வசக்தி" "எது மனிதனது கண்ணுக்கு  எட்டவில்லையோ அது தெய்வம் ". முதலுக்கு மேலே : முடிவுக்கு கீழே: என்னவென்று யாரும் அறிந்ததில்லை .ஆத்திகனுகும்   புரியவில்லை . நாத்திகனுக்கும் புரியவில்லை .ஆத்திகன் "இறைவன் "என்கிறான். நாத்திகன் "இயற்க்கை" என்கிறான்". சூன்யத்தை பற்றிய விவாதம் நடந்துகொண்டே இருக்கிறது இவ்வுலகில். இர்ருண்ட குகையில் நுழைந்த மனிதன் தடவி தடவி பொருள் கண்டுபிடிப்பதைபோல் தீராத இந்த கேள்விக்கு ....தினம் தினம் ஒரு பதில் கூறிக்கொண்டே இருக்கிறான் மனிதன். "உண்டு ?" .."இல்லை ?"..இந்த இரண்டு கேள்விகளும் இல்லையென்றால் சங்க இலக்கியங்களில் பாதி இல்லாமலே போயிருக்கும் .. இறை நம்பிக்கையை மறுப்பதும் ஏற்பதும் அவரவர் தனி சுதந்தரம். "ஆன்மீகத்தில் இல்லை என்ற சொல் இருக்கும்வரை ... உண்டு என்ற சொல்லுக்கான தேடல்  தொடர்ந்து கொண்டிருக்கும்".....       

2 comments:

  1. "எது மனிதனுக்கு பிடிபடவில்லையோ அது தெய்வசக்தி" "எது மனிதனது கண்ணுக்கு எட்டவில்லையோ அது தெய்வம் ".

    ம்ம்...நன்றாக உள்ளது...

    ReplyDelete
  2. ஆன்மீகத்தில் இல்லை என்ற சொல் இருக்கும்வரை ... உண்டு என்ற சொல்லுக்கான தேடல் தொடர்ந்து கொண்டிருக்கும்".....

    நிதர்சமான உண்மை இதை நான் ஆமோதிக்கிறேன்

    ReplyDelete