Sunday, January 23, 2011

manidha

மனிதனது மனது
*******************
"கடைத்தெருவில் ஒவ்வாரு  கடையாக ஓடி அலைகின்ற நாயைப்போல ,மனிதனது மனமும் ஓடுகிறது ",என்றார் பட்டிணத்தார்.மனிதனது துயரங்களுக்கு எல்லாம் காரணம் அவனுடைய மனம்தான் .
"பயப்படவேண்டிய விஷயங்களில் துணிந்து நிற்கிறது .துணிய வேண்டிய   விஷயங்களில் பயந்து ஒதுங்குகிறது.காரணம் இல்லாமல் கற்பனைகளை வளர்த்துக்கொண்டு கலங்குகிறது.நடந்துப்போன  கலங்களுக்காக  அழுகிறது.நடக்கப்போகும்  எதிர்காலத்தை எண்ணி அஞ்சுகிறது.அடுத்தவர்களுக்கு ஆறுதல் சொல்ல தெம்புடன் முன்வருகிறது.அந்த ஆறுதல் தனக்கே தேவைப்படும்போது சக்தியற்றுப்போகிறது".
"பசுமையயைக்  கண்டு மயங்குகிறது.
வறட்சியைக்  கண்டு குமுறுகிறது.
ஆசைகளை வளர்த்துக்கொள்கிறது.
உறவுகளுக்காக அழுகிறது.
ஆசாபசங்களில் அலைமோதுகிறது.
ஏம்மற்றங்களை எண்ணி வேகப்படுகிறது.
இயலாமையை எண்ணி வேதனைப்படுகிறது.
தன் தவறுகளை நியாயப்படுத்துகிறது.
மற்றவர் தவறுகளுக்கு தீர்ப்பு கூறுகிறது.
நடந்ததை எண்ணி வருந்துகிறது.
நடக்கப்போவதை எண்ணி பதறுகிறது.
உலகிற்க்காக  நடிக்கின்றது.
உள்ளுக்குள் உணர்வுகளை மறைக்கிறது.
மரணத்தை எண்ணி அஞ்சுகிறது.
மறுஜென்மத்தை எண்ணி குழம்புகிறது.
துன்ப்பத்தில்  இறைவனை ஏற்கிறது.
இன்பத்தில் இறைவனை  மறக்கிறது.
புகழைக்கண்டு  இன்பப்படுகிறது
இகழைக்கண்டு துன்பப்படுகிறது.
பிறப்பைக்கண்டு   கண்டு சிரிக்கிறது.
இறப்பைக்கண்டு அழுகிறது.
காமத்தில் லயிக்கிறது.
காசு பணத்திற்காக அலைகிறது.
ஒருசாண்  வயிற்றுக்காக வாடுகிறது.
ஆணவத்தில் பேசுகிறது.
அடிகள் விழுந்ததும் அடங்குகிறது.
 உள் உணர்வுகளால்  போராடி போராடி......
....... இறுதியில் சாம்பலாகக்  காற்றில் கலக்கிறது ".





        

1 comment:

  1. நல்லா இருக்கு...வாழ்த்துக்கள்.

    ReplyDelete